திட்டமிடல் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள்
கறுவா அபிவிருத்தித் திணைக்களத்திற்கு ஏற்புடைய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களைத் தயாரித்தல், மேற்பார்வை மற்றும் முன்னேற்ற கட்டுப்பாட்டுக்கேற்ப அனைத்து பொறுப்புக்களையும் ஏற்றல்,தேசிய கொள்கைகள் மற்றும் தேவைப்பாடுகளுக்கு இனங்கியவாறு ஒருங்கிணைந்த அணுகளின் ஊடாக திணைக்களத்தின் குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால அரச முதலீட்டுத் திட்டத்தை திட்டமிடல், திணைக்களத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய அத் திட்டங்களை நடைமுறை நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான செயல்களைப் புரிதல் மற்றும் அவற்றின் பெளதீக முன்னேற்றம் மற்றும் நிதி முன்னேற்றத்தை மீளாய்வுச்செய்தல்.
- திணைக்களத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுங்கியுள்ள ஏற்பாடுகளுக்கினங்க நடைமுறைத் திட்டங்களை தயாரித்து முன்வைத்தல்.
- அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை அமுலாக்குவதற்கு ஏற்புடையவாறு திணைக்களத்தின் கருத்திட்டங்களை கண்காணித்தல் மற்றும் முன்னேற்ற கட்டுப்பாட்டு முறைமையை வலிமைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
- திணைக்களத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களுக்கு ஏற்புடைய மாதாந்த,காலாண்டு மற்றும் வருடாந்த முன்னேற்றத்தை அமைச்சு மற்றும் மேல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தல்.
- அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்கேற்ப வருடாந்த நடைமுறைத் திட்டங்களின் பௌதீக மற்றும் நிதி இலக்குகளை அடைவதற்காக முன்னேற்ற மீளாய்வுகளை வழிநடாத்தல்.
- 100 மில்லியன் ரூபா எல்லையைக் கடக்கும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்ளின் காலாண்டு முன்னேற்றத்தை திணைக்கள இணையத்தளத்தின் ஊடாக இற்றைப்படுத்தல்.
- வருட இறுதி செயலாற்றுகை அறிக்கையை தயாரித்து முன்வைத்தல்.
- வருடாந்த வரவு-செலவு மதிப்பீட்டை தயாரித்து ஏற்புடைய நிறுவனங்களுக்கு சமர்ப்பித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
- பாராளுமன்ற வரவு-செலவு குழுக்களுக்கான வருடாந்த முன்னேற்றக் கட்டுப்பாட்டு அறிக்கையைத் தயாரித்து சமர்ப்பித்தல்.
- திணைக்களத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக பொருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, தேசிய திட்டமிடல் திணைக்களம், தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களம் போன்ற ஏனைய அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனாக்குதல்.
- திணைக்கள தரவுகள் முறைமையை நடாத்திச்செல்லல்.