நிர்வாகப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள்
  1.  ஆளணிகளை  அங்கிகாரம் செய்துக்கொள்ளல் மற்றும் இற்றைப்படுத்துவதற்கு எற்புடைய நடவடிக்கைகளைப் புரிதல்.
  2. ஒன்றிணைந்த சேவைகள்  அல்லாத திணைக்களமயமான பதவிகளுக்காக ஆட்சேர்ப்பு  விதிமுறையை தயாரித்தல், உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்தல் , இடமாற்றம் செய்தல், பதவி உயர்த்தல்,ஒழுக்காற்று கட்டுபாடு உட்பட திணைக்கள பதவி ஏற்றம் மற்றும் ஒழுக்காற்று அதிகாரத்தின் கீழ் விதிக்கப்படும் நிறுவனரீதியான பணிகளைப் பிரிதல்.
  3. நாடளாவிய சேவைகள்/ ஒன்றிணைந்த  சேவை உத்தியோகத்தர்களை இணைத்தல், அவர்களை இடமாற்றம் செய்தல், பதவி உயர்த்தல் மற்றும் ஒழுக்காற்று கட்டுபாட்டுக்கு ஏற்புடையதான திணைக்களத் தலைவருக்கு விதிக்கப்படும் பணிகளுக்கு ஏற்ப அடிப்படை நிறுவனப் பணிகளைப்  புரிதல் மற்றும் பரிந்துரைகளை  முன்வைத்தல்.
  4. நிறுவன பணிகளுக்கு ஏற்புடையதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட  கைத்தொழில் அமைச்சு, பொது நிர்வாக ,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முகாமைத்துவ சேவைகள்  திணைக்களம் மற்றும் அரச்சேவைகள் ஆணைக்குழுவுடன் ஒருங்கிணைத்தல்.
  5. மாத்தறை பலொல்பிட்டியில் அமைந்த சுற்றுலா விடுதியின் நிர்வாகம் மற்றும் செயல்பாட்டுப் பணிகளைப் புரிதல்.
  6. பிரதான அலுவலகத்தில் மற்றும் தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் கட்டடங்களும் கட்டுமாணப் பணிகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களும்  வாகனங்களும் போன்ற மூலதன சொத்துக்களை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல், தளபாடங்கள் மற்றும் அலுவலக  உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள், காணிகள் மற்றும் காணிகளை மேம்படுத்தல், மென்பொருள்  அபிவிருத்தி மற்றும் மூலதன சொத்துக்களை கையகப்படுத்தலுக்கு ஏற்புடைய பணிகளைப் புரிதல்.
  7. பொது மக்களின் முறையீடுகளை முகாமைதுவப்படுத்தல்.
  8. மனித வள அபிவிருத்தித் திட்டங்களை ஒழுங்கு செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் உட்பட நிறுவன மனித வளங்களை அபிவிருத்திக்கு ஏற்புடைய பணிளைப் புரிதல்.
  9. அரச உத்தியோகத்தர்களின் முற்பணங்களை வழங்குவதற்கு ஏற்புடைய பணிளைப் புரிதல்.
  10.  அமைச்சுக்களின் ஊடாக அனுப்ப வேண்டிய பாராளுமன்ற வினாக்களுக்கான விடைகளை தயாரித்தல் மற்றும் அமைச்சரவை விஞ்ஞாபனங்களைத் தயாரித்தல்.
  11. இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான நிர்வாக ஆணையாளர் ( ஒம்புட்ஸ்மன்),பொது மனுக்குழு, துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மற்றும் பாராளுமன்ற ஆலோசனைக்குழுவிடம் அனுப்ப வேண்டிய ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை அனுப்புதல் மற்றும் ஒருங்கிணைத்தல்
  12. வாகனங்களை நிர்வாகம் செய்தல் மற்றும் பராமரித்தல்.
  13. கறுவா அபிவிருத்திச் சட்டத்திற்கு ஏற்புடையவாறு சட்டம்சார் மற்றும் சட்டரீதியான பணிகளை தயாரிப்பதுக்கேற்ப அடிப்படை பணிகளைப்புரிதல்.
  14. அலுவலகத்தின் பயன்பாட்டுச் சேவைகளை தொடர்ந்தும் நடாத்திச்செல்லல்.

கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமை அலுவலகம் காலி மாவட்டத்தில் கரன்தெனியவில் நிறுவப்பட்டது. திணைக்களத்தின் முதல் பெரிய திட்டங்களில் காலி, பின்னதுவவில் உள்ள கறுவா வாசல் திட்டமாகும்.

விரைவு இணைப்புகள்

தொடர்பு கொள்ளவும்