தேசிய  கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான ஆராய்ச்சி நிறுவனமாகும். அங்கு பிரதான 4 பிரிவுகளின் கீழ் ஆராய்ச்சி அலுவல்கள் இயங்கவைப்பதோடு கறுவா காணிகளின் அறுவடை, உற்பத்தியின் பண்புள்ள தன்மையை மற்றும் சந்தையை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு கறுவா  கைத்தொழிலில், பல துறைகள் ஊடாக பல்வேறு தரப்பினர்களுக்காக  தேவையான  ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரதானமாக சூழல் ரீதியாக நிலைப்பேறான சிறந்த விவசாய மற்றும்  உற்பத்தி  செயல்முறைகளை அறிமுகப்படுத்தல், ஒன்றிணைந்த பூச்சிகள் மற்றும்  நோய்கள் முகாமைத்துவ செயல்முறைகளின் கீழ்  பயிர்ச்செய்கையின்  முகாமைத்துவ  அலுவல்களை மேம்படுத்தல், மேம்படுத்திய  வகைகளை  அறிமுகப்படுத்தல், உயர் உணவு மற்றும் ஔடத பெறுமதியுள்ள  மதிப்பு  கூட்டிய உற்பத்திகளை அறிமுகப்படுத்தல்,  உற்பத்தி செயல்முறைகளை பொறிமுறைப் படுத்தல் போன்ற பிரிவுகளின்  கிழ் ஆராய்ச்சிகள் நடந்துக்கொண்டு  வருகின்றன.

பிரிவுபிரதான ஆராய்ச்சி துறைகள்
தோட்டக்கலை  அறிவியல் மற்றும்  பயிர்ச்செய்கை மேம்படுத்தும்  பிரிவு
  • சுற்றுச்சூழல் மற்றும்  பொருளாதார  ரீதியாக  நிலைப்பேறான பாத்தி பாத்திர ஊடக கலவைகளை அறிமுகப்படுத்தல்
  •  சுற்றுச்சூழல் ரீதியாக நிலைப்பேறான சிறந்த விவசாய செயல்முறைகளை அறிமுகபடுத்தல்
  • கறுவா காணிகளின்  அறுவடை மற்றும் உற்பத்தியின் தரத்தை  மேம்படுத்தல்
  • கறுவாவுடன் துணைப் பயிர்ச்செய்கையாக பயிரிடக்கூடிய  பயிர் வகைகளை அறிமுகப்படுத்தல்  மற்றும் பயிர்களை விதைக்கும் முறைகளை அறிமுகப்படுத்தல்
  • மேம்படுத்திய  கறுவா  வகைகளை இணங்காணுதல்
  • கறுவா பயிர்ச்செய்கைக்காக வினைத்திறனான நீர் முகாமைத்துவ முறைமைகளை அறிமுகபடுத்தல்.
மண் மற்றும் தாவர ஊட்டச்சத்துப் பிரிவு
  • ஒன்றிணைந்த தாவர ஊட்டச்சத்து முறைகளை பயில்தல்.
  • சேதனப்பொருளுக்குரிய கறுவா பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்களைப் பற்றி பயில்தல்
  • தற்போது இரசாயன உரப் பரிந்துரைகளை இற்றைப்படுத்துவதற்காக பல இரசாயன உரம் அளவுகளை பயில்தல்
  • புதிய கறுவா வகைகளுக்கான  ஊட்டச்சத்து  முறைகளை  பயில்தல்.
  • புதிய கூட்டு இரசாயன உரம் பற்றி பயில்தல்
  • கறுவா காணிகளுக்காக  பயன்படுத்தக்கூடிய மண் விருந்தோம்பு துவாரங்களைப் பற்றி பயில்தல்.
  • கறுவா பாத்திகளுக்காக மாற்றுப் பாத்தி கலவைகளைப் பற்றி பயில்தல்  
  • பாரம்பரியமற்ற கறுவா பயிர்ச்செய்யும் பிரதேசங்களுக்கான போஷாக்கு  முகாமைத்துவ முறைகள் பற்றி பயில்தல்

தாவர பாதுகாப்புப் பிரிவு

  • சூழல் சாதகமான ஒன்றிணைந்த பூச்சி மற்றும் நோய்கள் முகாமைத்துவ செயல்முறைகளை அறிமுகபடுத்துதல்
  • சூழல் சாதகமான ஒன்றிணைந்த களை முகாமைத்துவ செயல்முறைகளை அறிமுகபடுத்தல்
  • நோய்கள் மற்றும் நோய்க் காரணிகளின் வாழ்க்கை சுழற்சி மற்றும் சூழலியற் காரணிகள் அடிப்படையில் அவைகளின் பொதுத்தன்மை மற்றும் பொருந்தும் தன்மை மாறல் பற்றி பயில்வதன் மூலம் பொருத்தமான ஒருங்கிணைந்த முகாமைத்துவ முறைகளை அறிமுகபடுத்தல்.
பின் அறுவடை தொழில்நுற்பப் பிரிவு
  • கறுவா குச்சிகள் மற்றும் பட்டைத் துண்டுகளை(பெதரின்ஸ்)களஞ்சியப்படுத்தும் போது பல்வேறு     முதன்மை பொதிகட்டும் முறைகளைப் பாவித்தல்.
  • பழங்களை தக்கவைப்பதற்காக கறுவா எண்ணெய் பாவித்தல்.
  • கந்தக தூம்மாக்கலுக்குப்  பின் கறுவா குச்சிகளின் தரமான  தன்மைக்கு ஏற்படும் விலைவுகள்
  • கறுவாவை நறுமணச் சுவையூட்டியாகக் கொண்டு  செய்யக்கூடிய மதிப்பு கூட்டிய உற்பத்திகளைப் பற்றி பயில்தல்
  • கறுவாவை தயாரிக்கும் போது சுகாதார பாதுகாப்புமிக்க  செயல்முறைகளை  பாவிப்பது தொடர்பான கண்காணிப்பு.

 

கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமை அலுவலகம் காலி மாவட்டத்தில் கரன்தெனியவில் நிறுவப்பட்டது. திணைக்களத்தின் முதல் பெரிய திட்டங்களில் காலி, பின்னதுவவில் உள்ள கறுவா வாசல் திட்டமாகும்.

விரைவு இணைப்புகள்

தொடர்பு கொள்ளவும்