தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம்

தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம், கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் அமுலாகின்ற, , கறுவாவிற்காகவே ஒதுக்கப்பட்ட  இலங்கையின்  ஒரே ஆராய்ச்சி நிலையமாகும். உலக மட்டத்தில் கருதினாலும் உண்மையான  கறுவாவிற்காக ஒதுக்கப்பட்ட  பழைமையான மற்றும்  ஒரே  ஆராய்ச்சி  நிலையம் இதுவாக கருதப்படும்.தென் மாகாணத்தில் மாத்தறை  மாவட்டத்தில் பலொல்பிட்டி , திஹகொட , 22 ஏக்கர் நிலப் பகுதிக்கு மத்தியில் இந்த மத்திய நிலையம்   அமைந்துள்ளது. இங்கு தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின், நான்கு ஆராய்ச்சி பிரிவுகளும் பயிற்சி பிரிவு ஒன்றும் இருக்கின்றன.

தோட்டக்கலை அறிவியல் மற்றும்  பயிர்ச்செய்கை மேம்படுத்தும் பிரிவின் மூலம, முக்கியமாக, புதிய கறுவா  வகைகளை விருத்தி செய்தல், தாவர கட்டுப்படுத்தல்  பற்றியும் கறுவா பயிர்ச்செய்கையின்  தோட்டக்கலை அறிவியல் பற்றிய ஆராய்ச்சி அலுவல்கள் செய்தலும் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றன. கறுவா பயிர்ச்செய்கையின் இலங்கையில் தற்போதுள்ள  விசாலமான மற்றும் முன்னணியான மரபணு சேகரிப்பை நடாத்திச்செல்லலும் இப் பிரிவினால் மேற்கொள்கின்றது.

மண் அறிவியல் மற்றும் தாவர ஊட்டச்சத்து உணவுப் பிரிவின் ஊடாக கறுவா  பயிர்ச்செய்கைக்கு ஏற்புடைய  அனைத்து மண் அறிவியல் ஆராய்ச்சி கருத்திட்டங்களும் மேற்கொள்ளப்  படுகின்றதோடு, புதிய உரம்  வகைகள் மற்றும் சேதன கறுவா பயிர்ச்செய்கைக்கு ஏற்புடைய பரிந்துரைகளை முன்வைத்தலும் முன்னணியாக மேற்கொள்ளப்படுகின்றது. சந்தர்ப்ப ரீதியாக கறுவா  நிலங்ளை பரிசோதித்தலும் மண்ணின்  நிலையைப் பற்றிய பரிந்துரைகளை வழங்குதலும் மண் அல்லது உரம் மாதிரிகளைப் பரிசோதித்து அறிக்கைகளை வழங்குதலும் மேற்கொள்ளப்படுகின்றது.

தாவர பாதுகாப்பு பிரிவின் ஊடாக, பயிர்ச்செய்கைக்கு பாதகம் செய்யும் பூச்சிகள் மற்றும் நோய்கள் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளல், களப் பரிசோதனைகள் மேற்கொள்ளல்,புதிய பூச்சிகளைக்  கட்டுப் படுத்தும் பரிந்துரைகளை வழங்குதல்,நோய்கள் மற்றும் பூச்சிகளை கண்டுபிடித்தல் மற்றும் அது தொடர்பான அறிக்கைகளை வழங்குதல் மேற்கொள்ளப்படுகின்றது.

கறுவா பயிர்ச்செய்கையின் பின் அறுவடையின் அழுத்தம் மிகப்பெரிதானதாலும் மதிப்பு கூட்டிய கறுவா உற்பத்திகளுக்காக அதிக தேவையொன்று இந்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையில் இருப்பதாலும் தேசிய கறுவா ஆராய்ச்சி  மற்றும் பயிற்சி நிலையத்தின் பின் அறுவடை தொழில்நுட்ப  பிரிவின் வேலைப்பாடுகள் அதற்கு மிக முக்கியமானதாகும். சரியான தொழில்நுட்பத்துடன் அறுவடை  பெற்றுக்கொள்வது  முதல் அறுவடையை ஒழுங்கு செய்தல்​, களஞ்சியப் படுத்தல், மதிப்பு கூட்டிய உற்பத்திகள், எண்ணெய்  வகைகளை  கரைத்தல் ,ஏற்றுமதிக்காக  தேவையான தர நிலைகள் மற்றும் சான்றுபடுத்தல்கள்,பயிற்சி விவகாரங்களுக்குத் தேவையான பங்களிப்பு வழங்குதல் போன்றவை பிரதானமாக இப் பிரிவின் வேலைப்பாடுகளுக்குள்ளாகும்.  அதற்கு புரம்பலாக இப் பிரிவிற்கு சொந்தமாக   இருக்கும்  அங்கீகாரமான (ISO 17025:2018) ஆய்வு கூடத்தின் மூலம் கறுவா மற்றும் அதன் உற்பத்திகளின் தரங்களுக்கேற்ப  தர நிலைகள் மற்றும் கறுவா எண்ணெய்யின் கலவைப் பொருட்களை பகுப்பாய்வு உட்பட  பல ஆய்வுகூட அறிக்கைகளை பெற்றுக்கொள்வதன் வசதி இருக்கின்றது.

வருடந்தோரும் ஒரு மிகப்பெரிய மக்கள் எண்ணிக்கை பல  வகைகளில் தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்துடன்  இணைந்து, தங்களது வேலை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். பல்கலைக்கழகங்கள் மற்றும் விவசாய கல்லூரிகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் இந்த நிலையத்தில் செய்முறை, பணியிடைப் பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சி அலுவல்களில் ஈடுபடுகிறார்கள்.மேலும் பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் , கறுவா சார்புடைய தங்களது  கைத்தொழில்களுக்காக அல்லது புதிய கைத்தொழில்களை  ஆரம்பிப்பதற்காக தேவையான அறிவைப் பெற்றுக்கொள்ளவும் நிறுவனத்தின் நூலகத்தைப் பயன்படுத்தவும் நிறுவனத்திற்கு வந்து அல்லது தொலைபேசியின்  மூலமாக இணைந்துக் கொள்கின்றார்கள். நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், மிகத்  தூரப் பிரதேசங்களிலிருந்து கூட கிடைக்கும் வேண்டுக்கோல்களுக்கு அமைய கறுவா பயிர்ச்செய்கை நிலங்களுக்குச் சென்று பயிர்ச்செய்கையை  மேலோங்கவைக்கவோ  இருக்கும் பயிர்ச்செய்கையில் பிரச்சினைகளை தீர்த்துக்கொடுக்கவும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவார்கள். தற்போது நிகழும் நிலையில் போக்குவரத்து வசதிகள் கடினமானதால் தொலைபேசி அல்லது  வேறு  தொழில்நுற்ப  முறைகளின் ஊடாக  பண்ணையை பரிசோதித்து தேவையான அறிவுறுத்தல்களை வெகு விரைவில் பெற்றுக்  கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

இந்த நிலையத்துடன்  இணைத்து அமைத்திருக்கும் பயிற்சி நிலையங்கள் மற்றும் விடுதி ஊடாக,  கறுவா பயிர்ச்செய்கையில் அடிப்படை பருவத்தில் இருந்து ஏற்றுமதி  வரை எந்தவொரு மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களுக்காகவும் தேவையான சுமார் 15 நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது செயற்படுகின்றன.  

தேசிய  கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நலையத்தின் கீழ், முழு வசதி கொண்ட கறுவா எண்ணெய்  கரைக்கும் அலகொன்று,நவீன வசதிகளின் கீழ் இயங்கும் சுற்றுலா பங்கலா போன்ற வேறு சேவைகளும் உள்ளன.

கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமை அலுவலகம் காலி மாவட்டத்தில் கரன்தெனியவில் நிறுவப்பட்டது. திணைக்களத்தின் முதல் பெரிய திட்டங்களில் காலி, பின்னதுவவில் உள்ள கறுவா வாசல் திட்டமாகும்.

விரைவு இணைப்புகள்

தொடர்பு கொள்ளவும்